விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மண் ஆய் நீர் எரி கால்*  மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்* 
  புண் ஆர் ஆக்கை தன்னுள்*  புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்* 
  விண் ஆர் நீள் சிகர*  விரைஆர் திருவேங்கடவா!*
  அண்ணா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.            

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விண் ஆர் நீள் சிகரம் - ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும்
விரை ஆர் - பரிமளம் மிக்கதுமான
திருவேங்கடவா - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற
அண்ணா - ஸ்வாமிந்!,
மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் - பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும்

விளக்க உரை

சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது. 1. “தீண்டாவழும்பும் செந்நீரும் சீயு நரம்பும் செறிதசையும், வேண்டாநாற்றமிகுமுடல்” என்றபடி புண்கள் நிறைந்து கிடக்குமிது. இப்படிப்பட்ட சரீரத்திலே அகப்பட்டுத் துவண்டு போனேன்; இனி ஒரு சரீரத்தையும் பரிக்ரஹிக்க சக்தியில்லாமையாலே ஜன்மாந்தரத்துக்கு அஞ்சி உன் திருவடிவாரத்திலே வந்துவிழுந்தேன், அடிமை கொண்டருளவேணும்-என்றாராயிற்று.

English Translation

You are the Earth, Water; Fire; Wind and the cloud-bearing sky. Carrying a wound-festered body, I have come groaning, weak and tired. O Lord of sky-touching Tiruvenkatam hills, my Elder! I have come to you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்