விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொன்றேன் பல் உயிரை*  குறிக்கோள் ஒன்று இலாமையினால்* 
  என்றேனும் இரந்தார்க்கு*  இனிது ஆக உரைத்து அறியேன்*
  குன்று ஏய் மேகம் அதிர்*  குளிர் மா மலை வேங்கடவா!*
  அன்றே வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

குறிக்கோள் ஒன்று இலாமையினால் - விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே
இரந்தார்க்கு - யாசித்தவர்களுக்கு
இனிது ஆக - மதுரமாக
என்றேனும் - ஒருநாளும்
உரைத்து அறியேன் - பதில் சொல்லி அறியேன்;

விளக்க உரை

“இன்று வந்தடைந்தேன்” என்னாதே “அன்றே வந்தடைந்தேன்” என்றருளிச் செய்த ஸ்வாரஸ்யம் விளங்குமாறு பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானித் தருளுமழகு பாரீர்; (அன்றே.) அநுதாபம் பிறந்தாதல் ப்ராயச்சித்தம் பண்ணியாதல் வருகையன்றிக்கே, கொன்ற கைகழுவாதே உதிரக்கை கழுவாதே வந்து சரணம்புகுந்தேன்.” (உதிரக்கை-கொலை செய்ததனால் ரத்தமயமான கை.)

English Translation

With no aim or purpose in life, I went about killing people. I never knew what it is to speak a kind word to people who came seeking my help. On the hill; tops the clotids rumble in cool; Tiruvenkatam. Today I have come to you. Pray take me into your service!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்