விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மிக்க பெரும்புகழ்*  மாவலி வேள்வியிற்*
    தக்கது இது அன்று என்று*  தானம் விலக்கிய* 
    சுக்கிரன் கண்ணைத்*  துரும்பாற் கிளறிய* 
    சக்கரக் கையனே!  அச்சோ அச்சோ*
     சங்கம் இடத்தானே!  அச்சோ அச்சோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மிக்க பெரும்புகழ் - (ஔதார்யத்;தால்) மிகுந்த கீர்த்தியையுடைய;
மா வலி - மஹாபலி (செய்த);
வேள்வியில் - யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ ;கேட்டதைக் கொöடுக்க முயன்ற வளவிலே);
இது - ‘நீ கொடுக்கிற விது;
தக்கது அன்று - தகுதியானதன்று;

விளக்க உரை

சுக்கிரன் - மஹாபலியின் ஆசார்யன். வாமநமூர்த்தியின் வடிவழகாலும் மழலைச் சொல்லாலும் மனமகிழ்ந்து மஹாபலி மூவடி மண்ணைக் கொடுக்க யத்நித்தவளவிலே சுக்ராசார்யன் எம்பெருமானது வடிவையும் வந்தவகையையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து ‘இவன் ஸர்வேச்வரன் தேவகார்யம் செய்யும்பொருட்டு உன் செல்வத்தை யெல்லாம் பறித்துப் போகவந்தான்; ஆகையால் நீ இவனுக்கொன்றும் தரத்தகாது’ என்று தாநத்தைத் தடுக்க அவன் அதை ஆதரியாமல் தாரைவார்த்து தத்தம் செய்யப்புக ஜலபாத்ரத்தின் (திருக்காவிரி) த்வாரத்திலே அந்த சுக்ரன் புகுந்து கொண்டு நீர் விழவொட்டாமல் தடுக்க ஸ்ரீவிஷ்ணு த்வாரம் சோதிப்பவன்போல தன்னுடைய திருக்கையிலணிந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால் அவன் கண்ணைக் குத்திக் கலக்க அவனும் கண்கெட்டு அங்குநின்றும் வெளிப்பட பின்பு மாவலியினிடத்தில் நீரேற்றுப்பெற்றனென்க. ‘துரும்பாற் கிளறிய சக்கரம்’ என்றதனால் “கருதுமிடம் பெருது - கைந்நின்ற சக்கரத்தன்” என்கிறபடியே திருமால் விரும்பிய இடங்களில் விரும்பின வடிவங்கொண்டு செல்லுந் தன்மையையுடைய திருச்சக்கரமே பவித்ரத்தின் வடிவத்துடன் நின்று சுக்ரன் கண்ணைக் கலக்கிற்றென்பது பெறப்படும்.

English Translation

O Lord wielding the conch and discus! In the great sacrifice of the famous Mahabali you gouged the eye of the Asura’s preceptor Sukra with the tip of your Pavitra grass, when he protested and tried to stop the gift of the three strides of land. Come Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்