விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கழல் மன்னர் சூழக்*  கதிர் போல் விளங்கி*
  எழலுற்று மீண்டே*  இருந்து உன்னை நோக்கும்*
  சுழலை பெரிது உடைத்*   துச்சோதனனை*
  அழல விழித்தானே!  அச்சோ அச்சோ*
  ஆழி அங் கையனே!  அச்சோ அச்சோ

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கழல் - வீரக்கழலையணிந்த;
மன்னர் - ராஜாக்கள்;
சூழ - தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்);
கதிர்போல் - ஸூரியன்போல;
விளங்கி - ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளையிட்டிருந்த தானே தனக்குந்தெரியாமல்);

விளக்க உரை

கண்ணபிரான் பாண்டவதூதனாய் துர்யோதநனிடமெழுந்தருள அக்கண்ணன் வருகையை அறிந்த துர்யோதநன் ‘கண்ணன் வரும்போது ஒருவரும் எழுந்து மரியாதை செய்யலாகாது’ என்று உறுதியாய் நயமித்துத் தானும் ஸபையிலே உறுதியுடனிருக்க கண்ணபிரான் அங்கேற எழுந்தருளின வளவிலே ஸபையிலிருந்த அரசர்கள் அனைவரும் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவின் சோதியைக் கண்டு பரவசராயெழுந்திருந்துவிட துர்யோதநன் தானும் துடை நடுங்கி எழுந்திருந்துவிட்டு உடனே கறுக்கொண்டு தானெழுந்தது தெரியாதபடியிருக்க கண்ணன் தனக்காக இட்டிருந்த க்ருத்ரிமாஸநத்திலே உட்காரும் போது அவ்வாஸநம் நெறுநெறென முறிய அப்போது பேருரு எடுத்துக்கொண்டு துர்யோதநனை உறுத்துப்பார்த்தனனென்க. இந்த ஸந்நிவேசந்தோற்ற எழுந்தருளியிருக்குமிடம் பெருமாள்கோயிலில் ‘திருப்பாடகம்’ என்னுந் திவ்விய தேசம். பாடு அகம் = பாடு - பெருமை; (“பாடிடம் பெருமையோசை” என்பது நிகண்டு. ) அது தோற்ற எழுந்தருளி யிருக்குமிடம் - பாடகம்; “அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதே யிடவதற்குப் பெரியமாமேனி அண்ட மூடுருவப் பெருந்திசையடங்கிட நிமிர்ந்தோன்” என்றதையுணர்க. கழல் - வீரக்குறியாகக் காலில் பூணுவதோ ராபரணம். சுழலை = ‘சூழலை’ என்பதன் குறுக்கல் (மூன்றாம் வேற்றுமை) சூழல் - ஆலோசித்தல் சூழ் - பகுதி; அல் - தொழிற்பெயர் விகுதி. ‘சுழலை’ என்று மொரு தனிச்சொல் உண்டென்க; ‘சுழலையில் நன்றுய்துங்கொலோ’ என்ற நாச்சியார் திருமொழி காண்க.

English Translation

The scheming Duryodhana sat with vassal kings around him like race around the Sun. When you came he rose involuntarily, then sat down and gave a hate –filled look. But your one look was enough to scorch him. O Lord with discus in hand, come Acho, Acho!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்