- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து* திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்* உணர்விலேன் ஆதலால் நமனார்*
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்* பரமனே! பாற்கடல் கிடந்தாய்!*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
காணொளி
பதவுரை
கோடிய மனத்தால் - கோணலான நெஞ்சோடே
சினம் தொழில் புரிந்து - பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து
நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு - நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து
ஓடியும் உழன்றும் - இங்குமங்கும் ஓடித்திரிந்தும்
உயிர்களே கொன்றேன் - பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய்
விளக்க உரை
English Translation
Bearing a crooked heart, doing things in anger, I did roam with hounds and enjoy it. Pursuing frightened creatures I killed them, without any thought for the poor ones! O Lord reclining in the mighty ocean, I have erased Yama-Dharma’s citadel. Searching myself well, I have come to your feet Naimisaraniyam-living Lord, O!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்